சூரிய, காற்றாலை மின் உற்பத்தியை ஏன் ஊக்குவிக்க கூடாது? - சென்னை உயர்நீதிமன்றம்

சூரிய, காற்றாலை மின் உற்பத்தியை ஏன் ஊக்குவிக்க கூடாது? - தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சூரிய, காற்றாலை மின் உற்பத்தியை ஏன் ஊக்குவிக்க கூடாது?  - சென்னை உயர்நீதிமன்றம்
x
காற்றாலை  மின்சாரத்தை பயன்படுத்தாதது தொடர்பாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு எதிராக தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கம் சார்பில்  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன், இந்த வழக்கு  விசாரணைக்கு வந்தபோது, மனு குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தமிழ்நாடு மின்சார துறை செயலாளர் நஸிமுதீன் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் விக்ரம் கபூர் ஆகியோருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது, தமிழகத்தில் மின் பற்றாக்குறை இல்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தங்களுக்கு தேவையான மின்சாரத்தை தாங்களே தயாரித்துக் கொள்ளும் வகையில், வீடுகளில் சூரிய மின் உற்பத்திக் கருவிகளை பொருத்துவதை  ஏன் கட்டாயமாக்கக் கூடாது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் சூரிய மின் உற்பத்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தியை ஏன் ஊக்குவிக்க கூடாது என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதி,  இதுகுறித்து அக்டோபர் 25ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்