அக்.4-ல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு

அனுமதி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டால். சம்பளம் பிடித்தம் செய்யப்படும்- தலைமை செயலாளர் எச்சரிக்கை
அக்.4-ல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு
x
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வரும் 4ஆம் தேதி விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசு ஊழியர்களின் போராட்டத்தில் பங்கேற்பது தமிழக அரசின் பணியாளர் ஒழுங்கு விதிகளுக்கு எதிரானது எனவும்,  சரியான காரணமாக இருந்தால் மட்டுமே வரும் 4ஆம் தேதி ஊழியர்களுக்கு,அதிகாரிகள் விடுமுறை தரவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.முன் அனுமதி இல்லாமல் விடுமுறை எடுப்போரின் ஒருநாள் சம்பளம் உள்ளிட்ட மற்ற சலுகைகள் பிடித்தம் செய்யப்படும் எனவும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


 


Next Story

மேலும் செய்திகள்