அம்பேத்கர் சிலையில் கைகளை ம‌ர்மநபர்கள் உடைத்த‌தால் பதற்றம்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வெள்ளாளபட்டியில் உள்ள அம்பேத்கர் சிலையில் கைகளை ம‌ர்மநபர்கள் உடைத்த‌தால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
அம்பேத்கர் சிலையில் கைகளை ம‌ர்மநபர்கள் உடைத்த‌தால் பதற்றம்
x
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வெள்ளாளபட்டியில் உள்ள அம்பேத்கர் சிலையில் கைகளை ம‌ர்மநபர்கள் உடைத்த‌தால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இந்த தகவல் அறிந்து, விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி என பல அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் மறியலை கைவிடாத போராட்டக்கார‌ர்கள் திடீரென உடலில் மண்ணென்னெய் ஊற்றிகொண்டு தீக்குளிக்க முயற்சித்த‌தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்