சென்னையில் 8 ஆண்டுக்கு பின்னர் குடியிருப்புகள் ஒதுக்கீடு
சென்னையில் 8ஆண்டுக்குப் பின்னர் ஒதுக்கீட்டாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வீடுகளை ஒதுக்கி வருகிறது.
2011 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, சோழிங்கநல்லுாரில், சுயநிதி திட்டத்தின் கீழ், வீட்டு வசதி வாரியம் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை அறிவித்தது. குறைந்த வருவாய் பிரிவில் 392 குடியிருப்புகளுக்கு குலுக்கல் நடத்தப்பட்டு, 2 ஆண்டில், வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, ஒதுக்கீடுதாரர்களுக்கு குடியிருப்புகள் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், 8 ஆண்டுக்கு பின்னர், தற்போது தான் பணிகள் முடிந்து, வீடுகளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஒதுக்கி வருகிறது. இது தொடர்பான கடிதங்கள் ஒதுக்கீடுதாரர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. ஏற்கனவே செலுத்திய 80 சதவிகித பணத்திற்கு, 4 சதவிகித வட்டி அளிக்கப்படுவதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடைசி தவணை தொகையில், 4 சதவிகித வட்டி தொகையை கழித்து, மீதமுள்ள தொகையை செலுத்தி, வீடுகளை பெற்றுக் கொள்ளலாம் எனவும் வாரியம் அறிவித்துள்ளது.
Next Story