பல் மருத்துவ படிப்பில் சேர ஆசையா? - சான்றிதழ்களுடன் நாளை நேரில் வந்தால் சீட்...

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள பல் மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், உரிய சான்றிதழ்களுடன் நாளை, வெள்ளிக்கிழமை மருத்துவக்கல்வி இயக்குனரகத்திற்கு நேரில் வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல் மருத்துவ படிப்பில் சேர ஆசையா? - சான்றிதழ்களுடன் நாளை நேரில் வந்தால் சீட்...
x
* தனியார் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள பல் மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், உரிய சான்றிதழ்களுடன் * நாளை, வெள்ளிக்கிழமை மருத்துவக்கல்வி இயக்குனரகத்திற்கு நேரில் வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில், பல் மருத்துவப் படிப்பில் இன்னும் 330 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப, சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, நாளையும் நாளை மறுநாளும் சென்னையில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குனரகத்தில் கலந்தாய்வு நடைபெறும். 

* இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள், உரிய சான்றிதழ்களுடன்,  நாளை நேரில் வரலாம் எனவும், ஏற்கனவே விண்ணப்பித்த மாணவர்கள், நாளை மறுநாள் நடக்கும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் எனவும், மாணவர் சேர்க்கை செயலாளர் செல்வராஜன் அறிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்