நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா? என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
x
நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள்  முறைகேடு தொடர்பாக முதலமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்ய, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக்கோரி, திமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஒப்பந்தப் புள்ளிகளை இறுதி செய்வது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள 3 குழுக்கள் பற்றிய விவரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.ஒப்பந்தப் பணிகளைப் பெற்ற நிறுவனங்கள், முதலமைச்சரின் நெருங்கிய உறவினர்கள் அல்ல என அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்முதலமைச்சருக்கு எதிரான புகார் குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்தி, அதன் அறிக்கை ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மீது முடிவு ஏதும் எடுக்காத நிலையில், புகார் மீது வழக்கு பதியக்கோரி வழக்கு தொடர முடியாது எனவும் அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.இந்த விவகாரம் தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா என நீதிபதி கேட்டதற்கு, அரசு தலைமை வழக்கறிஞர், இல்லை என பதிலளித்தார். இந்நிலையில், அக்டோபர் 5ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்