காரிலிருந்து செல்போன் திருடிய சிறுவன்
காரிலிருந்து செல்போன் திருடிய சிறுவன் - சிறுவனை கட்டி வைத்து அடித்ததால் பரபரப்பு
தஞ்சையில் காரிலிருந்து செல்போனை திருடிய சிறுவனை அப்பகுதி மக்கள் மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை தலைமை தபால் நிலையம் எதிரே நின்று கொண்டிருந்த காரிலிருந்து ஒரு சிறுவன் செல்போனை திருவிட்டு தப்பி ஓடி உள்ளான். இதனை கண்ட கார் ஓட்டுநர் மற்றும் அப்பகுதி மக்கள் அந்த சிறுவனை விரட்டி பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் சிறுவனை மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் அந்த சிறுவனை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
Next Story