போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற பிரபல கொள்ளையன் விபத்தில் உயிரிழப்பு

ஜாமீனில் வெளியே வந்த கொள்ளையன், புதுக்கோட்டையில் போலீசார் துரத்தியதில் மரத்தில் கார் மோதி உயிரிழந்துள்ளார்.
போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற பிரபல கொள்ளையன் விபத்தில் உயிரிழப்பு
x
* ஜாமீனில் வெளியே வந்த கொள்ளையன், புதுக்கோட்டையில் போலீசார் துரத்தியதில்  மரத்தில் கார் மோதி உயிரிழந்துள்ளார். 

* புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரை சேர்ந்த கோபாலகிருஷ்ண‌ன் மீது கீரனூர் தனியார் வங்கியில் 51 கிலோ நகைகள் கொள்ளை உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

* ஜாமினில் வெளிவந்த இவரிடம் திருட்டு வழக்கு ஒன்றிற்காக விசாரணை செய்ய போலீசார் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். இதை அறிந்த கோபால கிருஷ்ணன் தனது காரில் தப்பி சென்ற நிலையில்,  போலீசாரும் அவரை துரத்தி சென்றுள்ளனர்.   

* அப்போது  புதுக்கோட்டை மாத்தூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த அவரது கார், சாலையோரம் இருந்த மரத்தில் மோதியுள்ளது.இதில்  கோபால கிருஷ்ண‌ன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்