முன்னாள் அமைச்சர் மகன் மீது ஆள்கடத்தல் புகார் - சம்பந்தப்பட்ட பெண் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம்...

முன்னாள் அமைச்சர் மகன் மீது கடத்தல் புகார் அளிக்கப்பட்ட நிலையில், கடத்தியதாக கூறப்பட்ட பெண் நீதிமன்றத்தில் ஆஜராகி தன்னை யாரும் கடத்தவில்லை என்று வாக்குமூலம் அளித்தார்.
முன்னாள் அமைச்சர் மகன் மீது ஆள்கடத்தல் புகார் - சம்பந்தப்பட்ட பெண் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம்...
x
சென்னை சட்டக்கல்லூரியில் படிக்கும் தன் மனைவி யாழினியை, உடன் படிக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயபாலின் மகன் ரித்திஷ் கடத்தி சென்றுவிட்டதாக தஞ்சையை சேர்ந்த விஜயராஜேஷ்குமார் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரையடுத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்த நிலையில், தஞ்சை நீதிமன்றத்துக்கு வந்த யாழினி தன்னை யாரும் கடத்தவில்லை என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
 

Next Story

மேலும் செய்திகள்