திருவிழா போல காட்சி தரும் காரமடை சந்தை...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை சந்தை பற்றி ஒரு செய்திதொகுப்பு.
திருவிழா போல காட்சி தரும் காரமடை சந்தை...
x
* கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை கிராமத்தில் செயல்பட்டு வருகிறது இந்த சந்தை. பேரூராட்சி அலுவலகம் அருகே இயங்கி வரும் இந்த சந்தை 1942 ல் தொடங்கப்பட்டது என்கிறார்கள். அதாவது சுதந்திரத்திற்கு முன்னதாக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் போது துவங்கப்பட்ட இந்த சந்தை இன்றும் அதே பொலிவுடன் செயல்பட்டு வருவதாக கூறுகிறார்கள் அப்பகுதி மக்கள்.

* ஊட்டி மலைப்பகுதியில் விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்கள் விலை மலிவாக இங்கே கிடைக்கும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமை நடக்கும் இந்த சந்தையில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் என எல்லாம் மலிவாக கிடைக்கிறது.

* அதேபோல் துணிகளையும் இந்த சந்தையில் குறைவான விலையில் வாங்கிச் செல்ல முடியும். காரமடையை சுற்றியுள்ள வெள்ளியங்காடு, காளிபாளையம், சின்னபுத்தூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த பொருட்களை நேரடியாக கொண்டு வந்து இங்கே விற்பனை செய்கின்றனர். 

* சமையலுக்கு தேவைப்படும் மளிகை சாமான்கள், பிளாஸ்டிக் பொருட்கள், மூங்கில் பொருட்கள் என எல்லாம் இங்கு கிடைக்கிறது. மண் பாத்திரங்களையும்  இங்கு பேரம் பேசி வாங்கிச் செல்லலாம்.பெண்களுக்கு ஏற்ற வகையில் வளையல்கள், கண்ணாடி, பொட்டு உள்ளிட்ட பேன்சி சாமான்களும்  கிடைப்பது இந்த சந்தையின் சிறப்பு.

* கோவை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் இந்த சந்தையால் பயன் பெறுகின்றனர். இங்கிருந்து காய்கறிகளை மொத்தமாக வாங்கிச் சென்று சில்லறை வியாபாரம் செய்யும் வணிகர்களும் அதிகம்.

* பாரம்பரியமான இந்த சந்தைக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் சார்பில் முன்வைக்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்