சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் விசாரணை : முத்தையா ஸ்தபதியை கைது செய்ய தடை நீட்டிப்பு

மயிலாப்பூர் கோயிலில் மயில் சிலை மாயமான வழக்கில், முத்தையா ஸ்தபதி உள்பட 4 பேரை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை மேலும் 3 வாரத்திற்கு நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் விசாரணை : முத்தையா ஸ்தபதியை கைது செய்ய தடை நீட்டிப்பு
x
* சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் நீதிபதி மகாதேவன் அடங்கிய சிறப்பு அமர்வு முன், இன்று விசாரணைக்கு வந்தது. மயிலாப்பூர் மயில்சிலை மாயமான வழக்கில் முன்ஜாமின் கோரி ஸ்தபதி முத்தையா உள்ளிட்ட 4 பேர் தொடந்த வழக்கில் பதிலளிக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அவகாசம் கேட்டது. இதனை ஏற்ற நீதிபதி, அதுவரை முக்கிய ஸ்தபதி முத்தையா, இணை ஆணையர் திருமலை உள்பட 4 பேரை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை 3 வாரத்திற்கு நீட்டித்து உத்தரவிட்டார். 

* இதேபோல், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சிலைகள் காணாமல் போனது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அவகாசம் கோரியது. இதனை ஏற்ற நீதிபதி மகாதேவன், 2 வாரம் அவகாசம் வழங்கி விசாரணையை தள்ளி வைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்