"நீலகிரி வனப்பகுதிக்குள் யாரையும் அனுமதிக்கக் கூடாது" - மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

நீலகிரி வனப்பகுதிக்குள் யாரையும் அனுமதிக்கக் கூடாது என ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி வனப்பகுதிக்குள் யாரையும் அனுமதிக்கக் கூடாது - மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
x
ஆங்கிலேயர் ஆட்சியின்போது, வன பாதுகாப்புக்காக, 1877ம் ஆண்டில், 'நீலகிரி வன விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் சங்கம்' ஆரம்பிக்கப்பட்டது. ஆட்சியரை தலைவராக கொண்ட இந்த சங்கத்தில், குற்றப் பின்னணி உடையவர்கள்  உறுப்பினர்களாக இருப்பதாக கூறி, உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சீதாராமன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தபோது, சங்கத்தின் உறுப்பினர்கள் விலங்குகளை வேட்டையாடுவதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.இதுபோல, சங்கத்தின் உறுப்பினர்கள், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் நுழைந்து கேளிக்கைகளில்  ஈடுபடுவதாக ஆட்சியர் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிக்குள் வனத்துறை அதிகாரிகளை தவிர, வேறு யாரையும் அனுமதிக்கக் கூடாது என நீதிபதி உத்தரவிட்டார்.இது தொடர்பாக,  பொது அறிவிப்பு வெளியிடுமாறு ஆட்சியருக்கு உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை அக்டோபர் 3ம்  தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்