பாம்பன் ரயில் பாலத்தில் பொறியாளர்கள் குழு ஆய்வு - பாம்பன் ரயில் பாலத்தில் போக்குவரத்து தடைப்படுமா?

பாம்பன் ரயில் தூக்கு பாலத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க ரயில்வே அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
பாம்பன் ரயில் பாலத்தில் பொறியாளர்கள் குழு ஆய்வு - பாம்பன் ரயில் பாலத்தில் போக்குவரத்து தடைப்படுமா?
x
மண்டபத்தின் நிலப்பகுதியையும், ராமேஸ்வரம் தீவையும் இணைப்பதற்கான தூக்கு பாலத்தை கப்பல்கள் கடந்து செல்லும்போது திறந்து மூட ரயில்வே ஊழியர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த தூக்கு பாலத்தை மின்மோட்டர் மூலம் திறந்து, மூடும் வகையில் புதிய தூக்குபாலம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதற்காக 35 கோடி ரூபாயும் நிதியும் ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடேட் பொது மேலாளர் எம்.பி.சிங் ரெட்டி தலைமையில் பொறியாளர்கள் குழு, பாம்பன் தூக்கு பாலத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பழமை மாறாமல் புதிய தூக்கு பாலம் அமைப்பதற்கான டெண்டர்கள் விடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்