கடலூர் மாவட்டத்தில் நாட்டுக்கோழிகளுக்கு பெயர் பெற்ற சந்தை..

கடலூர் மாவட்டத்தில் நாட்டுக்கோழிகளுக்கு பெயர் பெற்ற சந்தை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...
கடலூர் மாவட்டத்தில் நாட்டுக்கோழிகளுக்கு பெயர் பெற்ற சந்தை..
x
* கடலூர் மாவட்டத்தில் குறிப்பிட்டு சொல்லும் ஒரு இடமாக இருக்கிறது வடலூர் சந்தை... 4 ஏக்கர் பரப்பளவில் செயல்படும் இந்த சந்தையில் கிடைக்காத பொருட்களே இல்லை எனும் அளவிற்கு அத்தனையும் கொட்டிக் கிடக்கிறது.

* நாட்டுக்கோழிகள் விற்பனை செய்யப்படும் இடம் என்பதே வடலூர் சந்தையின் அடையாளம். விதவிதமான நாட்டுக்கோழிகளை இங்கு குறைவான விலையில் வாங்கிச் செல்ல முடியும் என்கிறார்கள் விவசாயிகள். உணவுத்  தேவைக்கான கோழிகள், வளர்ப்புக் கோழிகள், சேவல்கள், கோழிக் குஞ்சுகள், நாட்டுக்கோழி முட்டைகள் என எல்லாம் கிடைக்கும் இடமாக உள்ளது.

* சனிக்கிழமைகளில் நடக்கும் இந்த சந்தைக்கு 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகளும், மக்களும் வருவதுண்டு... நாட்டு மாடுகள், கன்றுக்குட்டிகள், உழவு மாடுகள் என எல்லாமும் இங்கு கிடைக்கிறது.


* கால்நடைகள் தவிர காய்கறிகள், பழங்கள், பூக்கள், மளிகை சாமான்கள் என  அனைத்தையும் ஒன்றாக ஒரே நேரத்தில் வாங்கிச் செல்ல முடியும் என்பதும் இந்த சந்தையின் சிறப்பு.

* நேரடியாக  கொண்டு வந்து விற்பனை செய்யும் இடம் என்பதால் போதிய லாபம் கிடைப்பதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்... சனிக்கிழமைகளில் காலை 6 மணிக்கு தொடங்கும் இந்த சந்தை இரவு வரை மக்கள் நெரிசலுக்கு மத்தியில் அமோகமாக நடந்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்