கீழ்பவானி வாய்க்கால் தடுப்புச்சுவர் இடிந்தது

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே கீழ்பவானி வாய்க்கால் கரையின் தடுப்புச்சுவர் இடிந்ததால் நீர்க்கசிவு ஏற்பட்டு, கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கீழ்பவானி வாய்க்கால் தடுப்புச்சுவர் இடிந்தது
x
பவானிசாகர் அணையில் இருந்து மங்கலம்பட்டி வரை 124 மைல் நீளமுள்ள கீழ்பவானி வாய்க்கால் மூலம் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், அணையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தொப்பம்பாளையம் பகுதியில்  வாய்க்காலின் அடியில் உள்ள சிறிய பாலத்தின் தடுப்புச்சுவர் இடிந்தது. இதனால் அந்த இடத்தில் நீர்க்கசிவு ஏற்பட்டதால், மணல் மூட்டைகளை கொண்டு அடுக்கும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்