ரூ.18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மதுவகைகளை காப்பீடு செய்ய டா​ஸ்மாக் முடிவு

18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில் வகைகளை காப்பீடு செய்ய டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ரூ.18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மதுவகைகளை காப்பீடு செய்ய டா​ஸ்மாக் முடிவு
x
* டாஸ்மாக் கடைகளில் திருட்டு, தீ விபத்து  சம்பவங்களால் டாஸ்மாக் நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த 2017-2018 ஆம் ஆண்டில் மட்டும் திருட்டு மற்றும் தாக்குதல் சம்பவத்தில் டாஸ்மாக் நிறுவனத்துக்கு 520 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோன்று ஆண்டு தோறும் தீ விபத்துகளால் மட்டும் 50 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பும் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

* இதேபோன்று மதுபாட்​டில்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றும் போதும் இழப்புகள் ஏற்படுவதாகவும், 2013-2014 ஆம் ஆண்டில் இது 500 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், இந்த இழப்புகளை ஈடுகட்ட மதுபாட்டில்களை காப்பீடு செய்ய டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதேபோன்று இறக்குமதி செய்யப்படும் மதுபாட்டில்களுக்கும் காப்பீடு செய்வதன் மூலம் இழப்பை தவிர்க்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காப்பீட்டுக் காலம் வரும் நவம்பர் முதல் தேதியில் இருந்து துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். முதல்முறையாக அரசு நிறுவனம் காப்பீடு செய்வது இது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்