ஜெயலலிதாவை 2 முறை வித்யாசாகர் ராவ் பார்த்தார் - ரமேஷ்சந்த் மீனா

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், முன்னாள் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவின் முதன்மை செயலாளர் ரமேஷ்சந்த் மீனா நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
ஜெயலலிதாவை 2 முறை வித்யாசாகர் ராவ் பார்த்தார் - ரமேஷ்சந்த் மீனா
x
* 2016-ம் ஆண்டு அக்டோபர் 1 மற்றும் 22 ஆகிய தேதிகளில், அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை, அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் பார்த்ததாக, ரமேஷ்சந்த் மீனா தமது வாக்குமூலத்தில்  கூறியுள்ளார்.

* குறிப்பாக 22-ஆம் தேதி,  சிசியூவில் இருந்த ஜெயலலிதா தன்னை பார்த்து கட்டை விரலை உயர்த்தி காட்டினார் என ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூறியதாகவும் அவர் சாட்சியம் அளித்துள்ளார்.

* அக்டோபர் 1-ம் தேதி லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பிலே அளித்த மருத்துவ அறிக்கையை ஆளுநர் பார்த்ததாகவும், உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு  40 சதவீதமே  இருப்பதை தெரிந்து கொண்டதாகவும் செயலாளர் ரமேஷ்சந்த்மீனா கூறினார்.

* 2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி இரவு ஜெயலலிதாவின் உடல் நிலைகுறித்து தெரிந்த கொள்வதற்காக மும்பையில் இருந்த தமிழகம் வந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், மருத்துவமனையில் ஜெயலலிதாவை நேரில் பார்க்கவில்லை என்றும், அவரது உடல்நிலை குறித்து அப்பலோ தலைவர்  பிரதாப் ரெட்டியிடம் கேட்டறிந்தாகவும்,  ஆளுநர் வித்யாசாகர் ராவின் முதன்மை செயலாளர் ரமேஷ்சந்த் மீனா வாக்குமூலம் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்