அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதி

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதி
x
* பழங்காநத்தம், திருநகர், எஸ்.எஸ்.காலணி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட இடங்களில், தினமும் 3 முறை மின் தடை ஏற்படுவதாகவும், ஒவ்வொரு முறையும் அரைமணி நேரத்திற்கு மேல் மின்சாரம் நிறுத்தப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலூர் வட்டத்தில் உள்ள கிராமப்பகுதிகளில் இரவு நேரங்களில் 4 மணிநேரம் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. 

* அதேபோல் திருமங்கலம் மற்றும் உசிலம்பட்டி வட்டங்களில் 3 மணி நேரத்திற்கு மேல் மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் கூறியுள்ளனர். தினமும் 3 மணி நேரத்திற்கு மேல் மின்தடை ஏற்படுவதால் குழந்தைகள் மற்றும் மாணவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.



* முன்னறிவிப்பு ஏதுமின்றி, தினமும் 2 மணி நேரத்திற்கு மேல் மின்சாரம் நிறுத்தப்படுவதாக கிருஷ்ணகிரி பகுதி மக்களும் புகார் தெரிவித்துள்ளனர். பகல் நேரத்தில் மட்டுமல்லாமல் நள்ளிரவிலும் மின்சாரம் நிறுத்தப்படுவதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். வேலூர், சேலம், விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்ட பொதுமக்களும்,  மின்வெட்டு புகார் கூறியுள்ளனர். 

* தொழில் நகரமான கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் நாள்தோறும் 2 மணி நேரம் மின்வெட்டு நிலவுவதாக கூறப்படுகிறது. 
இதேபோல், சேலம் மாவட்டம் வாழப்பாடி  வட்டம் சிங்கிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் 2 முதல் 3 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

* மதுரை மாநகர் பகுதி, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதியில் நாள்தோறும் 3 மணி நேரம் மின் தடை ஏற்படுவதாகவும், குறிப்பாக மதுரை மேலூரில் 4 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு நிலவுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

* விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நாள்தோறும் 4 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

* புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, திருமயம், அறந்தாங்கி ஆகிய இடங்களில் கடந்த 2 தினங்களாக நீண்ட நேரம் மின் தடங்கள் நீடிப்பதால் அதிக பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. 
 
* திருவள்ளூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் நாள்தோறும், ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் மின்வெட்டு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

* கன்னியாகுமரியில் தொழிலக பகுதிகளில் ஒரு மணி நேரமும், குடியிருப்பு பகுதியில் 2 மணி நேரமும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்