வழக்கறிஞர்கள் தங்களுக்கு தெரிந்தவற்றையெல்லாம் பேசக்கூடாது - நீதிபதி சுந்தரேஷ்

வழக்கில் வாதாடும் போது, வழக்கறிஞர்கள் தங்களுக்கு தெரிந்தவற்றையெல்லாம் பேசக்கூடாது என்று, நீதிபதி சுந்தரேஷ் அறிவுறுத்தி உள்ளார்.
வழக்கறிஞர்கள் தங்களுக்கு தெரிந்தவற்றையெல்லாம் பேசக்கூடாது - நீதிபதி சுந்தரேஷ்
x
உயர்நீதிமன்ற மதுரை கிளை வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தமிழ் இலக்கிய விழா நடைபெற்றது. இதில், தலைமை தாங்கி சிறப்புரையாற்றிய நீதிபதி சுந்தரேஷ், கம்பராமாயணத்தில் கூறப்பட்டுள்ள நாட்டுப்புற பாடல்களையும், நகரப்பாடல்களையும் தொகுத்து கவிதை நடையில் பேசினார். மேலும், வழக்குகளில் வாதாடும் வழக்கறிஞர்கள் தங்களுக்கு தெரிந்தவற்றையெல்லாம் பேசாமல், நீதிபதியின் காதுகளுக்கு போய்ச்சேர வேண்டியதை மட்டுமே பேச வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். அது தான் உரிய வாதமாக எடுத்துக் கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்