அரசு பேருந்து கட்டணம், நேரம் பற்றிய விவரங்கள் : இணையதளத்தில் செப்.20-க்குள் வெளியிட அறிவுறுத்தல்

தமிழக அரசு பேருந்துகளின் வழித்தட பட்டியல், இயக்கப்படும் நேரம் மற்றும் கட்டண விவரங்களை இணையதளத்தில் வெளியிடுமாறு, மண்டல போக்குவரத்து அதிகாரிகளுக்கு, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
அரசு பேருந்து கட்டணம், நேரம் பற்றிய விவரங்கள் : இணையதளத்தில் செப்.20-க்குள் வெளியிட அறிவுறுத்தல்
x
அரசு பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறி, கதர்மாதியன் என்பவர் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதுதொடர்பாக, கடந்த மாதம் 24ஆம் தேதி நடைபெற்ற மண்டல போக்குவரத்து அதிகாரிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், ரயில் மற்றும் விமானங்களை போல், அரசு பேருந்துகள்  
இயக்கப்படும் நேரம், கட்டண விவரம்  உள்ளிட்ட விவரங்களை இணைய தளங்களில் வரும் 20ம் தேதிக்குள் வெளியிடுமாறு, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்