அரசு பள்ளியில் கணித ஆசிரியர் பணியிடை நீக்கம் - மாணவர்கள் போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் கும்மனூர் அரசு உயர்நிலை பள்ளியில், கணித ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து பள்ளி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
அரசு பள்ளியில் கணித ஆசிரியர் பணியிடை நீக்கம் - மாணவர்கள் போராட்டம்
x
கும்மனூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலை பள்ளியில் 8-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு மற்றும் 10 வகுப்புகளுக்கு கணித பாட ஆசிரியராக பணியாற்றியவர் ஜெயபிரகாஷ்.  அவர் மீது வந்த புகாரை விசாரித்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், அவரை  பணியிடை நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.இதனை கண்டித்து பள்ளி மாணவ,மாணவிகள் 150-க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மீண்டும் ஜெயபிரகாஷை பணியமர்த்த வேண்டும் என வலியுறுத்தி  கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அவர்கள் மண்டியிட்டு போராட்டம் நடத்தினர்.தகவலறிந்து அங்கு வந்த போலீசார் மற்றும் வட்டாட்சியர் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் முறையிடுவதாகவும் அதுவரை மாணவர்கள் பொறுமை காக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.வேண்டும் என்றே மாணவர்களை தூண்டிவிட்டி போராட வைப்பதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்