தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசு அறிக்கையை திரும்ப பெற வேண்டும் - தமிழக தலைமை செயலாளர்

தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசு அறிக்கையை திரும்ப பெற வேண்டும் என, தமிழக தலைமை செயலாளர் மத்திய நீர்வளத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசு அறிக்கையை திரும்ப பெற வேண்டும் - தமிழக தலைமை செயலாளர்
x
தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எழுதியுள்ள கடிதத்தில்,  தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசடைந்ததற்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் அல்ல மத்திய நிலத்தடி நீர் வாரியம் அறிக்கை அளித்திருப்பது முரணாக உள்ளதாக கூறியுள்ளார். அறிவியல் ஆராய்ச்சிப்படி ஆலை மாசால் மக்களின் உடல்நிலை பாதிப்பு என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்ததாகவும், இதனால் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டதாகவும் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார். எனவே, மத்திய நீர்வளத்துறையின் ஆய்வு அறிக்கையை திரும்ப பெற வேண்டும். என்றும், ஆய்வறிக்கை ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக இருப்பது போன்று தோற்றமளிப்பது தேவையற்றது என்றும் அவர் கூறியுள்ளார். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு தற்போது அமைதி திரும்பியுள்ள நிலையில், இந்த அறிக்கை தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில், தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்