திருமண தோஷம் போக்கும் நித்திய கல்யாண பெருமாள்

திருமண தோஷத்தை போக்கி தன்னை நம்பி வரும் பக்தர்களுக்கு நல்வாழ்வு கிடைக்க வழிகாட்டும் நித்ய கல்யாண பெருமாளின் சிறப்புகள்
திருமண தோஷம் போக்கும் நித்திய கல்யாண பெருமாள்
x
* சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரத்திற்கு அருகே இருக்கிறது திருவிடந்தை. இங்கு அழகிய தோற்றத்துடன் வீற்றிருக்கிறார் நித்ய கல்யாண பெருமாள்.

* ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோயிலின் பெருமைகளை கேள்விப்பட்டு இங்கு வரும் பக்தர்கள் ஏராளம்.

* கர்ப்ப கிரகத்தில் இருக்கும் பெருமாள் வராக அவதாரத்தில் கோமளவள்ளி தாயாருடன் இருக்கும் காட்சி பேரழகு. தினமும் இங்குள்ள சுவாமிக்கு திருமணம் நடைபெற்றதால் இவர் நித்ய கல்யாண பெருமாளாகவே பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். 

* திருமணத் தடை உள்ள பெண்கள், ஆண்கள் இந்த கோயிலுக்கு வந்து ஒரு மாலையை வாங்கி சுவாமிக்கு படைத்து வழிபடுகின்றனர். 

* மற்றொரு மாலையை தங்கள் கழுத்தில் அணிந்து கொண்டு கோவிலை 9 முறை சுற்றி வந்து வழிபட்ட பிறகு அதை தங்கள் வீட்டின் பூஜையறையில் வைத்து பத்திரப்படுத்துகின்றனர். 

* இவ்வாறு செய்தால் தோஷம், தடைகள் நீங்கி திருமணம் கைகூடும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது. 

* திருமணம் நடந்து முடிந்ததும் அவர்கள் வீட்டில் வைத்த மாலையை கோயிலுக்கு கொண்டு வந்து அங்குள்ள தொட்டியில் போட்டு நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். 

* அதேபோல் குழந்தை பேறு இல்லாத பெண்களும் இங்கு வந்து மனமுருக வேண்டி நின்றால் வீட்டில் மழலை தவழும் பாக்கியம் கிடைக்குமாம்.

* மாசி மகத்தன்று பெருமாளுக்கு நடக்கும் நீராட்டு விழா, சித்திரையில் நடக்கும் பிரம்மோற்சவ விழா பிரசித்தம். 

* சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக இந்த கோயிலுக்கு செல்லலாம். கோயிலின் நடை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.


Next Story

மேலும் செய்திகள்