தமிழகத்தில் இந்த ஆண்டு ஜூலை வரை 38,491 விபத்துக்கள் நடந்துள்ளன - தமிழக அரசு
பதிவு : ஆகஸ்ட் 27, 2018, 09:23 PM
இருசக்கர வாகனங்களில் செல்லும் போது ஹெல்மெட் மற்றும் கார்களில் செல்வோர் சீட்பெல்ட் அணிய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் சாலை விபத்துக்களை  குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கடந்த மாதம் இறுதி வரை 38 ஆயிரத்து 491 விபத்துக்கள் நடந்துள்ளதாகவும், அதில் 15 ஆயிரத்து 601 இருசக்கர வாகன விபத்துக்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துகளில் 7 ஆயிரத்து 526 பேர் இறந்துள்ளதாகவும், அதில் 2 ஆயிரத்து 476 பேர் இருசக்கர வாகன விபத்துகளில் இறந்தவர்கள் என்றும், இதில் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் ஆயிரத்து 811 இருசக்கர வாகன ஓட்டிகள் இறந்துள்ளதாகவும்  குறிப்பிடப்பட்டுள்ளது. வாகனங்களில் செல்வோர் உயிரை பாதுகாத்து கொள்ள சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து இருசக்கர வாகனங்களில் செல்லும் போது ஹெல்மெட் மற்றும் கார்களில் செல்வோர் சீட்பெல்ட் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டப்படி இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் தலைக்கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

விபத்தில் காயமடைந்தவரை மீட்ட காவல் ஆய்வாளர் : பொதுமக்கள் பாராட்டு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் விபத்தில் காயமடைந்தவரை காவல் ஆய்வாளர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

20 views

மணப்பாறை : 2 தனியார் பேருந்துகள் கவிழ்ந்து விபத்து

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கல்லுப்பட்டி அருகே தனியார் பேருந்து ஒன்று சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

1638 views

மகள் உயிரிழப்பு : திட்டமிட்ட கொலை - உதவி ஆய்வாளர் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னையில் மகள் விபத்தில் உயிரிழக்க, அது திட்டமிட்ட கொலை என சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.

541 views

பயணிகள் மற்றும் ஆட்டோ மீது, கார் மோதி விபத்து - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு

கோவை அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் உயிரிழந்ததாக கருதி பிணவறையில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் உயிர் பிழைத்துள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

4831 views

பிற செய்திகள்

இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் : அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக, இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் எந்த தகுதியின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது? என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

3 views

மேகதாது - முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை

மேகதாது அணைக்கு உடனடியாக தடை பெறுமாறு தமிழக அரசை திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

6 views

2-வது முதலீட்டாளர்கள் மாநாடு ஏற்பாடு - ரூ.2.55 லட்சம் கோடி ஈர்க்க திட்டம்

முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்கின்றனர்

7 views

தனியார் கல்லூரி கட்டண நிர்ணயிக்க குழுவுக்கு எதிராக மனு - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

வரும் 31 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தனியார் கல்லூரி கட்டண நிர்ணயக்குழுவுக்கும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தார்.

14 views

புகழிமுருகன் கோயிலில் 2வது நாள் தேரோட்டம் : கிராமிய நடனத்தில் அசத்திய பக்தர்கள்

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் புகழிமுருகன் இரண்டு நாள் தைப்பூச தேரோட்ட திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

14 views

ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக அவகாசம் : துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் கோரிக்கை ஏற்பு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் வரும் 29 ஆம் தேதியன்று ஆஜராக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.