கல்வி கடன் பெறுவதில் தமிழகம் முதலிடம்...

கல்வி கடன் பெறுவதில் இந்திய மாநிலங்களில், தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி கடன் பெறுவதில் தமிழகம் முதலிடம்...
x
* 2017-18-ஆம் நிதியாண்டில் ஒரு லட்சத்து 52 ஆயிரம் தமிழக மாணவர்கள் ஆயிரத்து 659 கோடி ரூபாய் கல்வி கடன்களை பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

* இதேபோல், கர்நாடகாவில் ஆயிரத்து 655 கோடியும், மகாராஷ்டிராவில் ஆயிரத்து 473 கோடியும், ஆந்திராவில் ஆயிரத்து 123 கோடியும்,  கேரளாவில் ஆயிரத்து 169 கோடி ரூபாயும் கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இதே காலகட்டத்தில், உத்தரபிரதேசத்தில் வெறும் 542 கோடியும், மத்திய பிரதேசத்தில் 479 கோடியும், மேற்கு வங்கத்தில் 162 கோடி ரூபாய் மட்டுமே கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் அதிக அளவில் பொறியியல் மற்றும் மருத்துவ 
கல்லூரிகள் அமைந்திருப்பதே அதிக கல்விகடன் பெறப்படுவதற்கு முக்கிய காரணம் என்று கருதப்படுகிறது. அதிலும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தான் மிக அதிகம் கல்வி கடன்களை பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஆனால் மொத்த கல்வி கடன்களில் 6 ஆயிரத்து 434 கோடி ரூபாய் அளவுக்கு வாராக்கடன்களாக மாறி உள்ளன. இந்திய வங்கிகளின் மொத்த வராக்கடன்களில் இது 8.9 சதவீதம் என ரிசர்வ் வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்