கருணாநிதியை மறந்தால் தமிழை மறந்ததாக அர்த்தம் - கவிஞர் வைரமுத்து

சென்னையில் கருணாநிதி நினைவாக, "கடற்கரையில் தூங்கும் கடல்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
கருணாநிதியை மறந்தால் தமிழை மறந்ததாக அர்த்தம் - கவிஞர் வைரமுத்து
x
தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி மாறன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த கருத்தரங்கத்தில், அப்துல் காதர், கவிஞர் வைரமுத்து, மு.மேத்தா உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். கருத்தரங்கில் பேசிய கவிஞர் வைரமுத்து, கருணாநிதியை மறந்தால் தமிழை மறந்ததாக அர்த்தம் என்று கூறினார்.எழுத்து, சொல், செயல் இந்த மூன்றும் கொண்டவர் கருணாநிதி என்றும் புகழாரம் சூட்டினார்.மேலும் தன்னால் எந்த ஒரு சிந்தனையும் இன்றி ஒருவரை பற்றி 20 மணி நேரம் பேச முடியுமென்றால், அது கருணாநிதி மட்டுமாக தான் இருக்க முடியும் என்றும் வைரமுத்து குறிப்பிட்டார். 



Next Story

மேலும் செய்திகள்