ஆளுநருக்கு அளித்த கடிதத்தில் ஆட்சிக்கு எதிராக கருத்து கூறவில்லை - 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பு வாதம்

ஆளுநருக்கு அளித்த கடிதத்தில் ஆட்சிக்கு எதிராக கருத்து கூறவில்லை என தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆளுநருக்கு அளித்த கடிதத்தில் ஆட்சிக்கு எதிராக கருத்து கூறவில்லை - 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பு வாதம்
x
* தகுதி நீக்கத்தை எதிர்த்து 18 எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த வழக்கு, மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் முன்பு நேற்று 11வது நாளாக மீண்டும் விசாரணைக்கு வந்தது.

* 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ஆட்சியை கவிழ்க்க திட்டம் தீட்டியதாக, 18 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக  ஜக்கையன் அளித்ததாக சொல்லப்படும் புகார் தொடர்பான ஆவணங்கள்  சபாநாயகர், தங்கள் தரப்புக்கு அளிக்கவில்லை என்றார்.

* ஆட்சிக்கு எதிராக 18 எம்எல்ஏக்கள்  செயல்படவில்லை என்றும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி ஆளுநருக்கு  அளித்த 4 பக்க கடிதத்தில், ஆட்சிக்கு எதிராக எந்த கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை எனவும், முதல்வரை மட்டும் மாற்ற வேண்டுமென தெரிவிக்கபட்டதாகத் அவர் வாதிட்டார்.

* உட்கட்சி விவகாரம் என்பதால், 18 பேருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமே தவிர, தகுதி நீக்கம் செய்து உத்தரவிட முடியாது எனவும் பி.எஸ்.ராமன்  வாதிட்டார். 

* திமுகவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சிக்கு எதிராக இவர்கள் 18 பேரும் செயல்பட்டார்கள் என்ற சபாநாயகரின் முடிவு  தவறானது எனவும், சபாநாயகர் அளித்த நோட்டீசுக்கு அளித்த பதிலை முழுமையாக ஆய்வு செய்யாமல் அவசரமாக தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டு இருப்பதாகவும், இந்த உத்தரவு என்பது முற்றிலும் தவறானது எனவும் வாதிடப்பட்டது.

* இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் மற்றும் முதல்வர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம், உள்கட்சி பிரச்சினைகளை மூன்றாவது நபரிடம் எடுத்துச் செல்ல முடியாது என்றும்,ஒருவேளை ஆளுனர் இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுத்திருந்தால், ஆளுங்கட்சிக்கு எதிராக முடிவுகள் அமைந்திருக்கும் என்றும், இதிலிருந்து 18 பேரும் கட்சிக்கு எதிராக செயல்பட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது என  வாதிட்டார்.

* மேலும்,முதல்வரை ஆளுநரால் மாற்ற முடியாது... கட்சி நடவடிக்கை எடுக்காததால் ஆளுனரிடம் புகார் அளித்ததாக எம்.எல் ஏ.க்களே ஒப்புதல் தெரிவித்துள்ளனர் என அரியமா சுந்தரம் வாதிட்டார்.

* 18 பேர் புகார் அளித்த அடுத்த நாள், திமுக செயல் தலைவர் ஆளுநரை சந்தித்து சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி மனு அளித்தார் என்றும்,

* கடந்த ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி நடந்த கட்சிக் கூட்டத்திற்கு 18 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அந்தக் கூட்டத்தில் 
அவர்கள் கலந்து கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

* அவரது வாதம் முடிவடையாததால், வழக்கின் விசாரணையை வரும் 31ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்