குரூப் 2 தேர்வு : இதுவரை ஒரு லட்சத்து 43 ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்

குரூப் 2 தேர்வுக்கு இதுவரை ஒரு லட்சத்து 43 ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ள நிலையில், வரும் செப்டம்பர் 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 9 லட்சமாக உயரும் என டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குரூப் 2 தேர்வு : இதுவரை ஒரு லட்சத்து 43 ஆயிரம் பட்டதாரிகள்  விண்ணப்பித்துள்ளனர்
x
* சார்பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட ஆயிரத்து 199 பதவிகளுக்கான குரூப் 2 தேர்வுக்கு ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.

* இன்று வரை ஒரு லட்சத்து 43  ஆயிரம் பட்டதாரிகள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

* செப்டம்பர் 9 ம் தேதி கடைசி நாள் என்பதால், செப்டம்பர் முதல் வாரத்திற்குள் மேலும் 7 லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 11 ம் தேதி காலை 10 மணி்முதல் 1 மணி வரை போட்டித் தேர்வு நடக்கிறது. 

* வழக்கமாக, குரூப் 2 நிலையில், குறைந்த எண்ணிக்கையிலான இடங்களே  அறிவிப்பாக வரும். ஆனால், முதல் முறையாக ஆயிரத்து 199 இடங்கள் அறிவித்திருப்பதால், போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்