கடைமடைக்கு விரைவாக நீர் செல்ல நடவடிக்கை - பொதுப்பணித்துறை விளக்கம்

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீர், கடை மடை பகுதிகளுக்கு விரைவாக சென்றடைய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக பொதுப்பணித்துறை கூறியுள்ளது.
கடைமடைக்கு விரைவாக நீர் செல்ல நடவடிக்கை - பொதுப்பணித்துறை விளக்கம்
x
* மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீர், கடை மடை பகுதிகளுக்கு விரைவாக சென்றடைய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக பொதுப்பணித்துறை கூறியுள்ளது. 

* கல்லணைக்கு தண்ணீர் சென்றடைந்த பின்னர், காவிரி 24 பிரிவுகளாகவும், வெண்ணாறு 17 பிரிவுகளாகவும், கல்லணை கால்வாய் 27 வாய்க்கால்களாக பிரிந்தும் கடை மடைக்கு தண்ணீர் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 

* இவற்றில் நேரடியாக தண்ணீர் வழங்கப்படும் 8 ஆறுகளிலும், பாசனம் மற்றும் வடிகால் மூலம் தண்ணீர் வழங்கப்படும் 28 ஆறுகளிலும் தண்ணீர் விரைவாக கடைமடை பகுதிகளுக்கும், பாசனத்திற்கும் சென்றடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* குறிப்பாக உய்யகொண்டான் கால்வாய், கல்லணைக்கால்வாய், மற்றும் வாடவார் நீட்டிப்பு கால்வாய் ஆகியவை வடிவமைக்கப்பட்ட கால்வாய்களாக இருப்பதால் பாசனத்திற்கு தண்ணீர் சென்றடைய அதிக நாட்கள் தேவைப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 

* இருப்பினும், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் விரைவாகசென்றடைவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்