காவிரியில் வெள்ளம் வந்தும் காய்ந்து கிடக்கும் குளங்கள் - பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

காவிரி, கொள்ளிடம் ஆறுகள் வெள்ளநீர் கரைபுரண்டோடுகின்ற நேரத்தில், பாசன வாய்க்கால்களில் நீர் விடாததால் குளங்கள் காய்ந்து கிடப்பதை கண்டித்து கிராம மக்கள் காலிகுடங்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காவிரியில் வெள்ளம் வந்தும் காய்ந்து கிடக்கும் குளங்கள் - பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
* மயிலாடுதுறை காவிரி ஆற்றில் இருந்து பிரியும் பாசன வாய்க்காலான நல்லத்துக்குடி வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி, முறையாக தூர்வாராததால் நல்லத்துக்குடி கிராமத்தில் உள்ள செல்லியம்மன்கோயில் குளம், பாப்பான்குளம், பெரியகுளம் மற்றும் அட்டைகுளம் ஆகிய 8 குளங்களில் ஒருசொட்டு தண்ணீர்
கூட இல்லாமல் வறண்டு கிடக்கிறது.  

* முறையான நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து நல்லத்துக்குடி கிராம பொதுமக்கள், பெண்கள் காலி குடங்களுடன் உடையார்குளத்தில் இறங்கி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

* காவிரி மற்றும் பாசன ஆறுகளில் இருந்து பிரியும் கிளை வாய்க்கால்களை தூர்வாரி வறண்டு கிடக்கும் குளங்களில் நீரை சேமிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்