கேரள மாநில பகுதிக்கு 2ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 141 புள்ளி 20 அடியை எட்டியதை தொடர்ந்து கேரள மாநில பகுதிக்கு 2ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரள மாநில பகுதிக்கு 2ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
x
கேரளாவின் இடுக்கி மாவட்டம், தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் பெய்துவரும் கன மழையால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் இரவு 2.45 மணியளவில் அணையில் இருந்து 13 மதகுகள் வழியாக கேரளாவுக்கு 4 ஆயிரத்து 800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்றைய நிலவரப்படி, அணைக்கு 23 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 

குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது



பெரியாறில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  இடமலையார் அணையில் இருந்து விநாடிக்கு 700 கியூபிக் மீட்டர் நீரும், இடுக்கி செருதோணி அணையில் இருந்து ஆயிரம் கியூபிக் மீட்டர் நீரும் பெரியாறில் திறந்து விடப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு மழை பெய்துவருவதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கொச்சி விமான ஓடுதளத்திற்குள் புகுந்த வெள்ளம்



கேரளாவில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கன மழை காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மாநிலத்தில் முழு கொள்ளளவை எட்டிய அணைகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இடமலையார் மற்றும் இடுக்கி செருதோனி அணையிலிருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால்,பெரியாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள கொச்சி நெடும்பஞ்சேரி விமான ஓடுதளத்திற்குள் வெள்ளநீர் புகுந்தது. இதை தொடர்ந்து, விமான சேவை நிறுத்தப்பட்டு விமான நிலையம் மூடப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்