"நடப்பாண்டில் 5.6 % அதிக வருவாய்" - தெற்கு ரயில்வே பொது மேலாளர்
நடப்பு ஆண்டில் ஜூலை மாதம் வரை ஆயிரத்து 432 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் குல்ஸ்ரேஸ்தா தெரிவித்துள்ளார்.
சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை மைதானத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் குல்ஸ்ரேஸ்தா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், நடப்பு ஆண்டில் ஜூலை மாதம் வரை ஆயிரத்து 432 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவித்தார். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, இது 5 புள்ளி 6 சதவீதம் அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Next Story

