ரூ.8 கோடி மோசடி செய்ததாக அண்ணா தொழிற்சங்க முன்னாள் செயலாளர் சின்னசாமி கைது

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அண்ணா தொழிற்சங்க முன்னாள் செயலாளர் சின்னசாமியை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
ரூ.8 கோடி மோசடி செய்ததாக அண்ணா தொழிற்சங்க முன்னாள் செயலாளர் சின்னசாமி கைது
x
அதிமுக அண்ணா தொழிற்சங்க செயலாளராக இருந்தவர் சின்னசாமி. சிங்காநல்லூர் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவான இவர், அண்ணா தொழிற்சங்கத்தில் செயலாளராக இருந்தபோது 8 கோடி ரூபாய் நிதியை கையாடல் செய்ததாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

அது குறித்து விசாரித்த மத்திய குற்றப் பிரிவு போலீசார் சின்னசாமியை நேற்று கோவையில் கைது செய்தனர்.இன்று சென்னை அழைத்துவரப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

இந்தநிலையில், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் சின்னசாமி செயல்பட்டுள்ளதாகவும் அதனால் அவரை, அதிமுக உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாகவும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்