சேலம் பெரியார் பல்கலைகழகத்தில் பல்வேறு ஊழல்கள் கண்டுபிடிப்பு

சேலம் பெரியார் பல்கலைகழகத்தில் கடந்த இருபது ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட செலவினங்களில் 47 கோடி ரூபாய் கணக்கில் சமர்பிக்கப்படாதது தெரியவந்துள்ளது.
சேலம் பெரியார் பல்கலைகழகத்தில் பல்வேறு ஊழல்கள் கண்டுபிடிப்பு
x
சேலம் பெரியார் பல்கலைகழகத்தில் கடந்த ஒரு வாரமாக 
கணக்குத் தணிக்கை நடைபெற்று வருகிறது.இந்த ஆண்டுக்கான கணக்கு வழக்குகளை உள்ளாட்சி நிதி தணிக்கை ஆய்வாளர் ரவி தலைமையில் தணிக்கை குழுவினர் தணிக்கை செய்து வருகின்றனர்.

இதில் பல்கலைகழகம் தொடங்கப்பட்ட காலம் முதல் 2015-2016 ஆம் ஆண்டு வரை 47 கோடியே 44 லட்சம் ரூபாய்க்கான ஆவணங்கள் சமர்பிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

மேலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட உபரியாக 70 உதவி பேராசிரியர்,17 பேராசிரியர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புகார்களை குறித்து விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாக பல்கலைகழக பதிவாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்