ஆடி மாதத்தில் பச்சை நிறத்தில் பக்தர்களுக்கு காட்சி தரும் பச்சையம்மன்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த மூனுகப்பட்டு கிராமத்தின் அடையாளமாகவும் காவல் தெய்வமாகவும் குடி கொண்டிருக்கிறார் பச்சையம்மன்.
ஆடி மாதத்தில் பச்சை நிறத்தில் பக்தர்களுக்கு காட்சி தரும் பச்சையம்மன்
x
* திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த மூனுகப்பட்டு கிராமத்தின் அடையாளமாகவும் காவல் தெய்வமாகவும் குடி கொண்டிருக்கிறார் பச்சையம்மன். பல நூற்றாண்டுகளை கடந்த கோயில் இது காஞ்சிபுரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்ற காமாட்சியம்மன் மூனுகப்பட்டு பகுதியில் சிவனுக்கு யாகம் நடத்த எண்ணினார். 

* அப்போது தன் மகன்களான முருகன் மற்றும் கணபதியிடம் தண்ணீர் எடுத்து வரச் சொல்லியிருக்கிறார். அவர்கள் வர தாமதமானதால் ஒரு சிறிய குச்சியை எடுத்து தரையை கீறிவிட்டதில் கமண்டல நாகநதியாக உருவானது. 

* பின்னர் முருகன் கொண்டு வந்த நீர் செய்யார் நதியாகவும், விநாயகர் கொண்டு வந்த நீர் பிரம்மநதியாகவும் உருவெடுத்ததாக கூறப்படுகிறது. இந்த 3 நதியும் சங்கமிக்கும் இடத்தில் மண்ணால் சிவலிங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.  அங்கிருந்த வாழை மரங்களால் அலங்கரிக்கப்பட்டு உருவானவள் தான் பச்சையம்மன்.

* பச்சை நிறத்தில் காட்சியளிக்கும் அம்பாளுக்கு அபிஷேகமும் ஆராதனைகளும் ஆடி மாதத்தில் களைகட்டும்... அம்பாளை வேண்டிக் கொண்டு பச்சை நிற புடவை சார்த்தி வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே அதிகமாக இருக்கிறது... அம்பாளுக்கு பச்சை நிறம் உகந்தது என்பதால் இங்கு பச்சை நிறத்தில் பிரசாதம் வழங்கப்படுகிறது.

* மூன்று நதிகளும் இங்கு உருவானதால் இந்த பகுதியில் தண்ணீர் பஞ்சம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் வாரி வழங்கும் வள்ளலாக இருக்கிறாள் பச்சையம்மன்... ஆடி மாத திங்கட்கிழமையில் கோவிலில் கூட்டம் அதிகமாகவே இருக்கும். பச்சை நிற வளையலும், புடவையும் வழங்கி அம்பாளை மனமுருக வேண்டிச் செல்கின்றனர் பக்தர்கள்.

* பச்சையம்மனுக்கு இரு புறமும் சிவபெருமானும், விஷ்ணுவும் வாமுனி, செம்முனி என்ற பெயரில் இருந்து அருள் தருகின்றனர். பில்லி, சூனியங்களை அகற்றுவதோடு, திருமணத் தடையையும் அகற்றி நல்வாழ்வு தருகிறாள் இந்த அம்பிகை.


Next Story

மேலும் செய்திகள்