ஸ்டெர்லைட் மாசு - ஆதாரம் என்ன?

ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் மாசு தொடர்பான அறிவியல்பூர்வ ஆதாரங்கள் என்ன? - வரும் 20ம் தேதிக்குள் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
ஸ்டெர்லைட் மாசு - ஆதாரம் என்ன?
x
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் மாசு தொடர்பான அறிவியல் பூர்வமான ஆதாரத்தை வரும் 20-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவுக்கு, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததுடன், அதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டது. இந்நிலையில், தமிழக அரசின் வாதத்தை நிராகரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஆலையை திறக்க உத்தரவிட வேண்டும் எனக்கூறி, வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. ஸ்டெர்லைட் ஆலையில் அமிலக்கசிவை கண்காணிக்க அதிகாரி ஒருவரை பரிந்துரைக்க மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டது. வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும்வரை, ஆலையை திறக்கக்கூடாது எனவும், ஆலை இயங்காமல் இருப்பதை மாவட்ட ஆட்சியர் கண்காணிக்கவும் உத்தரவு பிறப்பித்தது. அதேநேரம், ஆலையால் மாசு தொடர்பான அறிவியல் பூர்வமான ஆதாரத்தை வரும் 20-ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு, தேசிய பசுமை தீர்பபாயம் உத்தரவிட்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்