"புகார் மீது வழக்கு பதிய மத்திய குற்றப் பிரிவுக்கு உத்தரவிடும் அதிகாரம் உள்ளது" - சென்னை உயர் நீதிமன்றம்

புகார்கள் மீது வழக்கு பதிவு செய்ய மத்திய குற்றப் பிரிவுக்கு உத்தரவிட சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
புகார் மீது வழக்கு பதிய மத்திய குற்றப் பிரிவுக்கு உத்தரவிடும் அதிகாரம் உள்ளது - சென்னை உயர் நீதிமன்றம்
x
25 கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாகக் கூறி, ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, சங்கரன்கோவிலை சேர்ந்த விஜயகுமார், தாமஸ் பாண்டியன் ஆகியோர் மீது, சென்னை அண்ணா நகரை சேர்ந்த ரமேஷ், மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். நடவடிக்கை இல்லாத நிலையில் புகார் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி,  மத்திய குற்றப் பிரிவு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ரமேஷ் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 'மத்திய குற்றப் பிரிவை, காவல் நிலையமாக கருத முடியாது' எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து ரமேஷ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார், குற்ற விசாரணை முறை சட்டத்தின்படி, மத்திய குற்றப் பிரிவு காவல் நிலையமாகவே  கருதப்படும் என்று அறிவுறுத்தி உள்ளார். 

மத்திய குற்றப்பிரிவு  பொறுப்பு அதிகாரியாக உதவி ஆணையர் செயல்படுவதால், புகார் மீது வழக்கு பதிவு செய்ய, மத்திய குற்றப் பிரிவுக்கு உத்தரவிட சிறப்பு நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதாகவும் நீதிபதி தெளிவுபடுத்தினார். மேலும் 2 மாதத்திற்குள் மனுதாரரின் மனுவை விசாரித்து  உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் சிறப்பு நீதிமன்றத்துக்கு, நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்