ஆன்லைன் பொறியியல் கலந்தாய்வில் 18 ஆயிரத்து 974 மாணவர்கள் சேர்க்கை - 3ம் சுற்று கலந்தாய்வுக்கு 8ம் தேதி இட ஒதுக்கீடு

முதல்முறையாக நடப்பு கல்வியாண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கை ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. இதுவரை 2 சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது.
ஆன்லைன் பொறியியல் கலந்தாய்வில்  18 ஆயிரத்து 974 மாணவர்கள் சேர்க்கை - 3ம் சுற்று கலந்தாய்வுக்கு 8ம் தேதி இட ஒதுக்கீடு
x
* முதல்முறையாக நடப்பு கல்வியாண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கை ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. இதுவரை 2 சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது.

* 190 முதல் 200 வரையிலான கட் ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான முதல் சுற்று  கலந்தாய்வில் 7 ஆயிரத்து 768 மாணவர்களும், 150 முதல் 175 கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வில் 18 ஆயிரத்து 513 பேர் இடம்பெற்றிருந்த நிலையில் 12 ஆயிரத்து 206 பேர் மட்டும் கல்லூரிகளில் சேர்ந்தனர்.

* இரு சுற்றுகளில் மொத்தம் 18 ஆயிரத்து 974 மாணவர்கள் சேர்க்கை உத்தரவுகளை பெற்றுள்ளனர். 

* இதையடுத்து, மூன்றாம் சுற்று கலந்தாய்விலும், 150 முதல், 175 வரையிலான கட்ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பங்கேற்கின்றனர். இவர்களுக்கு, வரும் 8 ம் தேதி இடம் ஒதுக்கீடு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்