சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ க்கு மாற்ற முடியுமா? - தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிறப்புக்குழு அமைக்கப்பட்ட நிலையில், விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட முடியுமா என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ க்கு மாற்ற முடியுமா? - தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
x
* கோவில் சிலைகள் கடத்தல் தொடர்பாக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உள்ளிட்டோர் தொடர்ந்துள்ள வழக்கு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

* நீதிபதி மகாதேவன் அமர்வு முன் விசாரணை நடைபெற்றபோது, இந்த வழக்குகளை சி.பி.ஐ- க்கு மாற்ற  கொள்கை முடிவு எடுத்துள்ளதாக தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

* இது சம்பந்தமான ஆவணங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ க்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

* இந்த வழக்குகள் நீதிபதி மகாதேவன் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க உயர்நீதிமன்றம், சிறப்பு  குழுவை நியமித்துள்ள நிலையில், வழக்குகளை சி.பி.ஐ க்கு மாற்ற முடியுமா? என அரசுத்தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.சிலை கடத்தல்  வழக்குகளை விசாரிக்கும் தனிப்பிரிவின் நிலை குறித்தும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

* இதற்கு பதிலளித்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை நடத்தும் எனவும்,  மற்ற வழக்குகளை சி.பி.ஐ விசாரிக்கும் எனவும் விளக்கமளித்தார். 

* அப்போது பேசிய வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சிலைகள் பாதுகாப்பு தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த எந்த உத்தரவுகளையும் தமிழக அரசு நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டினார். 

* சிலை கடத்தல் வழக்குகளை சிறப்பு குழு விசாரிக்கும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை,  உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

* அப்போது குறுகிட்ட அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், நீதிமன்றத்தின் அனைத்து உத்தரவுகளும் அமல்படுத்தப்படுவதாக பதிலளித்தார்.இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை நீதிபதி மகாதேவன், 8ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்