நீதிபதி ரகுபதி கமிஷன் விசாரணை நிறுத்திவைப்பு - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பதிவு : ஆகஸ்ட் 03, 2018, 10:59 PM
மாற்றம் : ஆகஸ்ட் 03, 2018, 11:02 PM
ரகுபதி கமிஷனின் செயல்பாடுகளை நிறுத்தி வைத்து, சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
முந்தைய திமுக ஆட்சியில், சென்னை - அண்ணா சாலை ஓமந்தூரார் அரசினர்தோட்ட வளாகத்தில்  புதிய தலைமை செயலகம்கட்டியதில்முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக 2012 -ல் நீதிபதி ரகுபதி கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷனை எதிர்த்தும், தமக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்ய கோரியும் திமுக தலைவர் கருணாநிதி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் 2015 ம் ஆண்டு ரகுபதி கமிஷன் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து, உத்தரவு பிறப்பித்திருந்தது. 3 ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும் ரகுபதி கமிஷனுக்கு, 2 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது, வீண் செலவு இல்லையா என கேள்வி எழுப்பிய நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவித்திருந்தார்.

இதன்படி, இந்த வழக்கை விசாரித்த , நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம்  புதிய தலைமை செயலக கட்டிட விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்டநீதிபதி ரகுபதி கமிஷன்விசாரணையைநிறுத்திவைத்து,தமிழகஅரசுக்குஉத்தரவிட்டார்.விசாரணை கமிஷன் தன்னிடம் உள்ள அனைத்து ஆதாரங்களையும் உடனடியாக தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, ஆவணங்களை ஆய்வு செய்து புகாரில் முகாந்திரம் இருந்தால், குற்றவழக்கு தொடர அனுமதி அளித்தார். அதேநேரம், விசாரணை கமிஷன்களுக்காக ஒதுக்கப்பட்ட அரசு பங்களாக்களை உடனடியாக காலி செய்யவும் நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அரசு கட்டிடங்களில் மட்டுமே இனி, விசாரணை கமிஷனின் அலுவலகங்கள் இயங்க வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார்.எஞ்சிய விசாரணை கமிஷன்கள், தங்கள் விசாரணைகளை விரைந்து முடிக்குமாறும், நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் அறிவுறுத்தினார்.எனவே, ரகுபதி கமிஷனின் செயல்பாடுகளை நிறுத்தி வைத்து, சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது, 

தொடர்புடைய செய்திகள்

"அதிமுகவின் ஒரே எதிரி திமுக" - கே.பி.முனுசாமி

வேலூர் மாவட்டம், ஆம்பூரில், அதிமுக சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

73 views

நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா? என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

443 views

கருணாநிதி நினைவு நிகழ்ச்சி - பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கலைஞர் புகழ் வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

1063 views

பிற செய்திகள்

மதுரையில் மகளிர் சுய உதவிக் குழு என்ற பெயரில் ரூ. 7 லட்சம் மோசடி

மதுரையில் மகளிர் சுய உதவிக்குழு என்ற பெயரில் மோசடி செய்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

18 views

எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு : தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது

நெல்லை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளியை போலீசார் மூன்று மாதங்களுக்கு பிறகு கைது செய்துள்ளனர்.

54 views

உதகை : பல வண்ண குடை மிளகாய்கள் விளைச்சல் அமோகம்

நீலகிரி மாவட்டம் உதகை அருகே அணிக்கொரை தும்மனட்டி, தாம்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் அதிகளவில் காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன

29 views

பாண்டிய மன்னர் காலத்து சிலை திருட்டு - தொடரும் உயிர் பலி : கோவிலை புனரமைக்க மக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டத்தில் பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட மீனாட்சி அம்மன் கோவிலில் விலை மதிப்பில்லா சிலைகள் மாயமாகி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

16 views

சென்னை அருகே பதுக்கி வைத்திருந்த ஒரு ஜோடி தந்தங்கள் பறிமுதல்

சென்னை அருகே ஒரு ஜோடி தந்தங்களை பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து தந்தங்களையும் பறிமுதல் செய்தனர்.

31 views

காட்டு யானை "விநாயகன்" பிடிபட்டது - மயக்க மருந்து செலுத்தி பிடித்தது வனத்துறை

கோவை பெரிய தடாகம் பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானையை, வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர்

172 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.