அண்ணா பல்கலை.விடைத்தாள் முறைகேட்டில் ஆண்டுக்கு ரூ.200 கோடிக்கு மேல் லஞ்சம் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

அண்ணா பல்கலைகழகத்தில் விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேட்டில் ஈடுபட்டதாக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா உட்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அண்ணா பல்கலை.விடைத்தாள் முறைகேட்டில் ஆண்டுக்கு ரூ.200 கோடிக்கு மேல் லஞ்சம் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்
x
மூன்று ஆண்டுகளாக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக உமா இருந்தபோது, இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தனக்கு ஆதரவான உதவி பேராசிரியர்களை பேப்பர் திருத்தும் பணியில் அமர்த்தி அவர்கள் மூலம், குறிப்பிட்ட கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை குறைத்துள்ளார்.இதற்கிடையே, விடைத்தாள் திருத்தும் பணியில் நியமிக்கப்பட்ட உதவி பேராசிரியர்கள், முன்னாள் துணைவேந்தர் ஒருவர் பணம் பெற்றுக் கொண்டு நியமித்த உதவி பேராசிரியர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

கடந்த 2016 மே மாதம் முதல் 2018 ஏப்ரல் வரை துணைவேந்தர் இல்லாததால், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியான உமா, அனைத்து பொறுப்புகளையும் கண்காணித்து வந்துள்ளார். இதனால், அந்த காலகட்டத்தில், ஆண்டுக்கு சுமார் 200 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் பெற்ற தகவலும் தற்போது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் விரைவில் துணைவேந்தர் ஒருவரும் சிக்குவார் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்