ஐ-போன் எனக் கூறி ஊர்வசி சோப்பை தந்த இளைஞர்கள் - 15 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஏமாந்த வங்கி மேலாளர்

சென்னையில், ஐபோன் என்று கூறி ஊர்வசி சோப்பை கொடுத்து வங்கி மேலாளரை ஏமாற்றிய இரண்டு மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஐ-போன் எனக் கூறி ஊர்வசி சோப்பை தந்த இளைஞர்கள் - 15 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஏமாந்த வங்கி மேலாளர்
x
சென்னை மயிலாப்பூரில் உள்ள  இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளைக்குள் நுழைந்த இரண்டு இளைஞர்கள், அங்கு மேலாளராக பணிபுரிந்து வரும் ரமேஷின் அறைக்குச் சென்று தங்களிடம் புதிய மாடல் ஐபோன் உள்ளதாகவும் அதன் விலை வெறும் 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே எனவும் கூறியுள்ளனர். இதையடுத்து, அவர்களிடம் 15 ஆயிரம் ரூபாயை கொடுத்து, அந்த ஐபோன் பெட்டியை ரமேஷ் வாங்கினார். 5 நிமிடம் கழித்து, அந்தப் பெட்டியை திறந்து பார்த்த ரமேஷ், அதனுள் ஐபோனுக்கு பதிலாக ஊர்வசி சோப்பு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, ரமேஷ் அளித்த புகாரின் பேரில், சிசிடிவியில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், மோசடி இளைஞர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்