கொல்லிமலையில் வல்வில் ஓரி திருவிழா தொடக்கம் - மலர், காய்கறி கண்காட்சியை ரசிக்கும் சுற்றுலா பயணிகள்

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வல்வில் ஓரி திருவிழா வெகு விமர்சையாக துவங்கியது.
கொல்லிமலையில் வல்வில் ஓரி திருவிழா தொடக்கம் - மலர், காய்கறி கண்காட்சியை ரசிக்கும் சுற்றுலா பயணிகள்
x
கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியை நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் விழா நடத்தப்படுவது வழக்கமாகும். அதன் படி இந்த ஆண்டிற்கான விழாவை ஒட்டி, வாசலூர்பட்டி தாவரவியல் பூங்காவில், மலர் கண்காட்சி துவங்கியுள்ளது. மாவட்ட ஆட்சியர் ஆசிய மரியம் துவங்கி வைத்த மலர் கண்காட்சியில், கார்பேனியம், ரோஜா, சாங் ஆப் இந்தியா, சில்வர் பேபி, சாமந்தி, ஆகிய மலர்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கண்காட்சியில், செல்பி பாயிண்ட், வெள்ளை ரோஜாக்களால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். மேலும், மலைக்காய்கறிகளை பயன்படுத்தி, 750 கிலோ எடையில் டிராகன், ஸ்பைடர் மேன், யானை, முதலை ஆகிய உருவங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்