ரூ.5000 கோடி பாக்கி தொடர்பான நிஷான் நிறுவனம் தொடர்ந்த வழக்கு - இருரப்புக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்
பதிவு : ஆகஸ்ட் 02, 2018, 05:31 PM
தமிழக அரசு 5 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி தொகை தர வேண்டும் என சர்வதேச நிறுவனங்களின் நீதிமன்றத்தில் நிஷான் கார் நிறுவனம் தொடர்ந்த வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இருரப்புக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் கார் தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக  நிஷான் நிறுவனத்திற்கும் தமிழக அரசுக்கும் இடையே 2008ஆம் ஆண்டு  ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் தங்களுக்கு ஊக்கத்தொகை உள்ளிட்ட  5 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கித்தொகையை தமிழக அரசு தரவேண்டியுள்ளதாக சர்வதேச நிறுவனங்களின் நீதிமன்றத்தில் நிஷான் கார் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. 

இதுதொடர்பாக 2016ஆம் ஆண்டு பிரதமர் அலுவலகத்திற்கு நிஷான் நிறுவனம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தலின்படி தமிழக அரசின் உயரதிகாரிகள்,  நிஷான் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது தமிழக அரசு 2000 கோடி ரூபாய் கொடுப்பது என உடன்பாடு எட்டப்பட்டதாக தெரிகிறது. முதல் தவணையாக 300 கோடி ரூபாயும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் 10 தவணையாக பணம் தர சம்மதம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் தமிழக முதலமைச்சரின் ஒப்புதல் கிடைத்தவுடன் கையெழுத்தாகும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

விமானத்தில் இயந்திரக் கோளாறு : விமானியால் உயிர்தப்பிய பயணிகள்

சென்னையில் இருந்து திருச்சி செல்ல வேண்டிய விமானத்தில் இருந்த கோளாறு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் உயிர்தப்பினர்.

1984 views

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா - பிரமாண்ட ஏற்பாடு

அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50 ம் ஆண்டு பொன்விழா ஆகியவை , சென்னை - நந்தனம் ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில், நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறுகிறது.

464 views

நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா? என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

439 views

தமிழகத்தில் தவிர்க்க இயலாத செலவுகள் அதிகரிப்பு- மத்திய கணக்கு தணிக்கைத் துறை தெரிவிப்பு

தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு தவிர்க்க இயலாத செலவுகளுக்கு ஒதுக்கப்படும் நிதி அதிகரித்து கொண்டே வருவதாக மத்திய கணக்கு தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது.

272 views

பிற செய்திகள்

3 மாத குழந்தையை பெற்ற தாயே கிணற்றில் வீசி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்

பெரம்பலூர் அருகே 3 மாத குழந்தையை பெற்ற தாயே கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...

4 views

சென்னை ஐ ஐ டி -யில் சாதியப் பாகுபாடு ? : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

சென்னை ஐ. ஐ. டி உணவகத்தில் சைவ, அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு என தனித் தனிநுழைவு வாயிலும், வெளியேறும் வழியும் உருவாக்கப்பட்டுள்ளதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

1 views

ஐ.ஐ.டி. உணவு விடுதியில் தனித்தனி வாயில்கள் அமைத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது - பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை ஐ.ஐ.டி. உணவு விடுதியில் தனித்தனி வாயில்கள் அமைத்து பிரிவினை ஏற்படுத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

21 views

"ஸ்டெர்லைட்டை திறக்கும் உத்தரவு : மகிழ்ச்சி" - தனவேல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கியுள்ள தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என அந்த ஆலையின் துணை தலைவர் தனவேல் தெரிவித்துள்ளார்.

41 views

ஸ்டெர்லைட் ஆலை : தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் - முதலமைச்சர்

ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

15 views

தமிழக அரசின் அரசாணை ரத்து : ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம்

ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆலை மீண்டும் செயல்பட அனுமதி அளித்துள்ளது

45 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.