அந்தரங்க வீடியோவை வைத்து மிரட்டிய கணினி பொறியாளர் கைது

'Track View' எனும் ஆப் மூலம் செல்போனில் இருந்த அந்தரங்க வீடியோவை சேகரித்து,பெண்களை ஆசைக்கு இணங்கும்படி மிரட்டி வந்த கணினி பொறியாளரை போலீசார் கைது செய்தனர்.
அந்தரங்க வீடியோவை வைத்து  மிரட்டிய கணினி பொறியாளர் கைது
x
ராமநாதபுரம் மாவட்டம் தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் கணினி பொறியாளர் தினேஷ் குமார். இவரிடம், அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண், தனது கணவர்  வெளிநாட்டில் இருப்பதாகவும், அவர் அனுப்பிய செல்போனில், சாஃப்ட்வேர்கள் பதிவிறக்கம் செய்து தரும்படி கோரியுள்ளார். 

அந்தப் பெண் கேட்ட சாஃட்வேர்களை பதிவிறக்கம் செய்த தினேஷ், கூடுதலாக track view என்னும் சாஃப்ட்வேரையும் பதிவிறக்கம் செய்து அந்த பெண்ணின் போனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார். இதன்மூலம் அந்த பெண், கணவருக்கு அனுப்பிய அந்தரங்க வீடியோக்களை தினேஷும் பார்த்துள்ளார். அவற்றை தனது செல்போனுக்கு பதிவிறக்கம் செய்துகொண்டு, தனது ஆசைக்கு இணங்கும்படி, அந்த பெண்ணை முகம் தெரியாத நபர் போல் தினேஷ் மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், தனது சகோதரி மூலம் குறிப்பிட்ட இடத்திற்கு வரும்படி தினேஷ்க்கு குறுந்தகவல் அனுப்பி உள்ளார். இதை நம்பி வந்த தினேஷை, அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் சுற்றி வளைத்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், இதே பாணியில் தினேஷ், பல பெண்களை இப்படி மிரட்டி இருப்பது தெரிய வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்