கிடப்பில் போடப்பட்ட பேருந்து நிலைய பணிகள் - கிரிவலத்திற்காக பல கிலோமீட்டர் நடந்து வரும் பக்தர்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 110 விதியின் கீழ் பேருந்து நிலையம் கட்டப்படும் என அறிவித்து ஐந்து ஆண்டுகள் ஆகியும், இன்று வரை அதற்கான இட ஆகிரமிப்பு பணிகள் கூட நடைபெறாமல் அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
கிடப்பில் போடப்பட்ட பேருந்து நிலைய பணிகள் - கிரிவலத்திற்காக பல கிலோமீட்டர் நடந்து வரும் பக்தர்கள்
x
திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம்  சுமார்  25 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. தற்போது வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதால் பேருந்து நிலையத்தில் எப்போதும் கூட்ட நெரிசல் அதிகமாகவே காணப்பட்டு வருகிறது.மாதம் தோறும் பௌர்ணமி கிரிவலத்திற்காக வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருகின்றனர்,. இதனால் கூட்டநெரிசல் ஏற்படுவது தொடர்கதையாகிவிட்டது.

இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், அன்றைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 110 விதியின் கீழ் திருவண்ணாமலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவித்தார்.இந்த அறிவிப்பு வெளியாகி சுமார் ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையிலும், புதிய பேருந்து நிலையம் அமைக்க தேவையான இடங்களை கையகப்படுத்தும் பணிகள் கூட நடைபெறவில்லை   திருவண்ணாமலைவாசிகள் வேதனைப்படுகிறார்கள்.



Next Story

மேலும் செய்திகள்