இன்று மிக நீண்ட சந்திர கிரகணம்... "பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்க முடியும்"

இன்று மிக நீண்ட சந்திர கிரகணம் ஏற்பட உள்ளதாகவும், இதை பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்க முடியும் என தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்
இன்று மிக நீண்ட சந்திர கிரகணம்... பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்க முடியும்
x
தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய இயக்குநர் சவுந்திரராஜ பெருமாள், இந்த சந்திர கிரணகத்தை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக சென்னை பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இதற்காக 5 தொலைநோக்கிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மிக நீண்ட சந்திர கிரகணம் என்று கூறிய அவர், இதை பொதுமக்கள் வெறும் கண்களாலேயே பார்க்க முடியும் என்றும் தெரிவித்தார்... 

Next Story

மேலும் செய்திகள்