பிரத்யேக செய்தி : மாணவர் விவரங்கள் திருட்டு - தேர்வுத்துறை புகார்
பதிவு : ஜூலை 27, 2018, 05:00 PM
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்கள் திருடப்பட்ட சம்பவம், தொடர்பாக தேர்வுத்துறை அதிகாரிகள், நேற்று , காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
2017ம் ஆண்டு  முதல் மாணவர்களின் தேர்வு முடிவுகள், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களுக்கு அனுப்பப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பள்ளிகள் மூலம் ஆன்லைன் வழியில் மாணவர்களின் விவரங்கள் பெறப்பட்டதாகவும், நடப்பாண்டில், 27 லட்சத்து 28 ஆயிரத்து 861 மாணவர்களுக்கு மொபைல் எண்கள் மூலம் முடிவுகள் அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் விபரங்களை, வியாபார ரீதியாகவும், தவறான வழிமுறைகளுக்காகவும்  திருடப்பட்டுள்ளதாவும், இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளதாகவும்,

இது அரசுக்கும், தேர்வுத்துறைக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்டஇணையதளங்கள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தமது புகாரில் வலியுறுத்தியுள்ளார்

இந்த புகார் மனுவுடன், பல்வேறு ஆவணங்களையும் தேர்வுத்துறை அதிகாரிகள் வழங்கி உள்ளனர். 

மாணவர்களின் விபரங்கள், யார், யாருக்கு வழங்கப்படுகிறது, மாணவர்களுக்கு மொபைல் போனில் தேர்வு முடிவுகளை அனுப்பும் ஒப்பந்தத்தை பெற்றவரின் விபரம் உட்பட பல்வேறு தகவல்களை தேர்வுத்துறை அளித்துள்ளது.

இதனடிப்படையில், சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

1479 views

பிற செய்திகள்

தோல் தொழிற்சாலையில் இருந்து ரசாயனம் வெளியேற்றம்

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் ரசாயன நீர் நிறைந்து காணப்படும் குளத்தை உடனடியாக சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

48 views

மின் கசிவால் சுமார் 10 ஏக்கர் கரும்பு பயிர் எரிந்து சேதம்..!

திருத்தணி அருகே குப்பன் என்ற விவசாயிக்கு சொந்தமான சுமார் 10 ஏக்கர் கரும்பு பயிர் மின்கசிவால் எரிந்து சேதம் அடைந்தது.

38 views

கொடைக்கானல் : கார் திருடனை மடக்கி பிடித்த பொதுமக்கள்

கொடைக்கானல் செண்பகனூர் பகுதியை சேர்ந்த ஜோசப் இரவில் தனது காரை 3 நபர்கள் திருட முயற்சிப்பதை பார்த்து சத்தம் போட்டுள்ளார்.

7 views

சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தவர் - அசாமில் 31 பேரை பிடித்து போலீசார் விசாரணை

இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 31 பேர் அசாம் மாநிலம் கௌஹாத்தியில் கைது செய்யப்பட்டனர்.

32 views

ஆர்வத்துடன் சப்பாத்தி உண்ணும் குரங்குகள் - சமூக வலைத்தளங்களில் பரவும் காட்சி

குரங்குகளுக்கு ஒருவர் ஆர்வமாக உணவு வழங்குவதும், அவற்றை நண்பர்களைப்போல அவை உரிமையாக வாங்கிச்செ​ன்று உண்பதும் வீடியோவாக பதிவுசெய்யப்பட்டு​ வலைதளங்களில் பரவ விடப்பட்டுள்ளது..

60 views

ஆனைமலையாறு - நல்லாறு அணை திட்டம் : உடனடியாக நிறைவேற்ற அரசுக்கு கோரிக்கை

ஆனைமலையாறு - நல்லாறு அணை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற கோரி திருப்பூரில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.