பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விவரம் திருட்டு - காவல் ஆணையர் அலுவலகத்தில், அதிகாரிகள் புகார்

பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்கள் திருடுபோன விவகாரத்தில், நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், தேர்வுத்துறை அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்.
பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விவரம் திருட்டு - காவல் ஆணையர் அலுவலகத்தில், அதிகாரிகள் புகார்
x
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. இதில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் வீட்டு முகவரி, அவர்கள் படித்த பள்ளி, மொபைல் எண் உள்ளிட்ட தகவல்கள் திருடப்பட்டு, பல்வேறு இணையதளங்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் சென்றுள்ளது.

இதனால், அதிர்ச்சி அடைந்த தேர்வுத்துறை அதிகாரிகள், இது குறித்து விசாரணை நடத்தக் கோரி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். 

தேர்வுத்துறை துணை இயக்குநர் தலைமையில் 3 அதிகாரிகள் நேரில் சென்று புகார் அளித்தனர்.

இது குறித்து சைபர் கிரைம் பிரிவு போலீசார் விசாரணை நடத்த  காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 

விசாரணை முடிவில் மாணவர்களின் விவரங்களை திருடியது யார் என்பது பற்றியும், எதற்காக திருடப்பட்டது போன்ற பல்வேறு  தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.


Next Story

மேலும் செய்திகள்