தண்ணீர் லாரி மோதி பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்பாக அறிக்கை

தண்ணீர் லாரி மோதி பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தண்ணீர் லாரி மோதி பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்பாக அறிக்கை
x
*சென்னை ஆவடியை அடுத்த பருத்திப்பட்டில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பொன்னம்பேடு கிராம பொதுநலச் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

*இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை அண்ணாசாலையில் டேங்கர் லாரி மோதி தாய் மகன் பலியான சம்பவம் தொடர்பாக பத்திரிக்கை செய்தியை சுட்டிக்காட்டி நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். 

*இதுபோன்று தண்ணீர் லாரி மோதி பலியானவர்களின் எண்ணிக்கை மற்றும் டேங்கர் லாரி ஓட்டுநர்களுக்கு உரிமம் வழங்கும் நடைமுறை குறித்தும் அறிக்கை  தாக்கல் செய்ய 

*சென்னை மாநகர காவல் ஆணையர், திருவள்ளூர், காஞ்சிபுரம்
மாவட்ட எஸ்.பி.க்களுக்கு  நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

*மேலும், சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சப்படுவது குறித்து அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பருத்திப்பட்டு நீர்நிலைகளை ஆய்வு செய்து இரண்டு வாரங்களில்  ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என திருவள்ளூர்  ஆட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்